/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/140_23.jpg)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். அந்த வகையில் தற்போது தமிழில் விஜய்யின் 'வாரிசு', கன்னடத்தில் 'கப்சா' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதனிடையே நடிப்பது மட்டுமில்லாமல் சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ், தன்னுடன் நடிக்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை எனத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் வெளிப்படையாக முன்வைக்கும் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என் அரசியல் விஷயங்கள் அவர்களுக்குஏதாவது பாதிக்குமோ எனத்தயங்குகிறார்கள். ஒரு சிலர், மற்றவர்களிடம் என்னிடம் நடிக்க வேண்டாம் எனக் கூறுகிறார்கள். அதனால் என்னை விட்டுவிலகுகிறார்கள். இதனால் எனக்கு அவர்கள் மேல் வருத்தம் இல்லை.
பல நடிகர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். அவர்களை நான் குறை கூற விரும்பவில்லை. இப்போது, ​​யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளுக்குக்குரல் எழுப்பாமல் இருந்திருந்தால் நான் ஒரு நடிகனாக மட்டுமே அறியப்பட்டு மறைந்திருப்பேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.என்னிடம் எல்லாவற்றையும் இழப்பதற்கான வலிமை உள்ளது. இருப்பினும் இப்போது நான் சுதந்திரமாக உணர்கிறேன். என்னுடைய பயம்தான் மற்றவர்களின் பலமாக மாறுகிறது." எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)